Thursday, November 1, 2012

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர்
    தகுதி பெற்றவர்களுக்கு
    வேலைவாய்ப்பு சீனியாரிட்டி
    சரி பார்ப்பு
    திருநெல்வேலி:ஆசிரியர்
    தகுதி தேர்வில் வெற்றி பெற்ற
    இடைநிலை ஆசிரியர்களுக்கான
    வேலைவாய்ப்பு அலுவலக
    சீனியாரிட்டி நேற்று சரி
    பார்க்கப்பட்டன.
    தமிழகத்தில் கடந்த ஒரு சில
    மாதங்களுக்கு முன்பு
    ஆசிரியர்
    தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
    இதில் இடைநிலை ஆசிரியர்
    பயிற்சி பெற்றோர் முதல்
    தாளையும், பி.எட் ஆசிரிய
    பயிற்சி முடித்தோர் இரண்டாம்
    தாள் தேர்வையும்
    எழுதினர்.இதில்
    வெற்றி பெற்றவர்களின் பட்டியல்
    அறிவிக்கப்பட்டது.
    தொடர்ந்து இவர்களுக்கு பணி
    நியமன ஆணை வழங்க உரிய
    நடவடிக்கைகள்
    எடுக்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில்
    இடைநிலை ஆசிரியர்
    தகுதி தேர்வில் முதல் தாளில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    வேலைவாய்ப்பு அலுவலக
    சீனியாரிட்டி சரி பார்க்க
    நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    நெல்லை மாவட்டத்தில்
    பாளை சாராள் தக்கர் பெண்கள்
    மேல்நிலைப் பள்ளியில்
    நேற்று நடந்தது.முதன்மை கல்வி
    அலுவலர் கிரேஸ்
    சுலோச்சனா ரத்னாவதி, மாவட்ட
    வேலைவாய்ப்பு அலுவலக
    உதவி இயக்குனர்
    மகாலட்சுமி மற்றும்
    அதிகாரிகள் கொண்ட குழுவினர்
    இப்பணிகளை மேற்கொண்டனர்.
    ஆசிரியர் தகுதி தேர்வில்
    தேர்ச்சி பெற்ற
    இடைநிலை ஆசிரியர்
    பயிற்சி பெற்றோர் தங்கள்
    வேலைவாய்ப்பு அலுவலக
    அடையாள அட்டை மற்றும்
    இரண்டு நகல்களுடன் இதில்
    பங்கேற்றனர்.
    தொடர்ந்து இவர்களின்
    வேலைவாய்ப்பு அடையாள
    அட்டை சரி பார்க்கப்பட்டது.
    தொடர்ந்து தகுதியான 48
    பேரின் பட்டியல் தயார்
    செய்யப்பட்டு ஆசிரியர்
    தேர்வு வாரியத்திற்கு
    அனுப்பும் பணி நடந்தது.
    இப்பட்டியல்
    முதன்மை கல்வி அலுவலக
    ஊழியர்கள் மூலம்
    கொண்டு செல்லப்பட்டன.

    ReplyDelete